அந்த வரிசையில் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள ‘மிருதன்’ படமும் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி மீண்டும் ‘ரோமியோ ஜுலியட்’ படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகளை மார்ச் மாதம் இடைவெளியில் தொடங்க இருக்கின்றனர். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மீண்டும் ஹன்சிகாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் அரவிந்த் சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’ படத்தில் இணைந்து நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல், மீண்டும் இந்த கூட்டணி அமைந்திருப்பது சினிமா வட்டாரங்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார்.
Post a Comment