0
sooriதமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களுக்கு சரியான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நான் கடவுள்  ராஜேந்திரன், சூரி ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் குறிப்பிடத்தக்க அளவில் கோலிவுட்டில் இல்லை என்பதுதான் உண்மை. புதிது புதிதாக சிலர் வந்தாலும் அவர்கள் இன்னும் ரசிகர்களின் சிரிப்பு நடிகர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.
வடிவேலு, சந்தானம் நடித்தால் நாயகனாகத்தான் நடிப்போம் என அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சந்தானமாவது தற்போது ;தில்லுக்கு துட்டு; படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஆனால், வடிவேலு இன்னும் பல கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தாலும் வர மாட்டேன் என்கிறார் என்றே சொல்கிறார்கள்.
தெறி படம் வந்தால் நான் கடவுள் ராஜேந்திரன் மேலும் ஒரு ரவுண்ட் வருவார் என்கிறார்கள். இதனிடையே ரஜினி முருகன் படத்தின் வெற்றி மூலம் சூரிக்கும் நல்ல பெயர் கிடைத்தது. கதாநாயகன்களின் நண்பனாக நடிப்பதற்கு தற்போதைக்கு சூரியை விட்டால் வேறு யாருமில்லை. கிராமம், நகரம் என எந்தக் கதையாக இருந்தாலும் அவரும் பொருந்திப் போகிறார்.
இருக்கும் வெற்றிடத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே அவர் விரும்புகிறாராம். அதனால் தன்னைத் தேடி வந்து நாயகனாக நடிக்கச் சொல்லிக் கேட்கும் பலரிடமும் இப்போதைக்கு காமெடி வண்டியே நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது, அதுவே போதும் என மறுத்துவிடுவதாகச் சொல்கிறார்கள். இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்ட தன் சீனியர்கள் நிலைமை அவருக்குப் புரியாதா என்ன ?.

Post a Comment

 
Top